Homeசெய்திகள்தமிழ்நாடுஎத்தனை மோடிக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது: சு. வெங்கடேசன் எம்.பி

எத்தனை மோடிக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது: சு. வெங்கடேசன் எம்.பி

-

- Advertisement -

எத்தனை மோடிக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது: சு. வெங்கடேசன் எம்.பிஎங்களின் மொழி, உரிமையை காப்பாற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.“ என்று ஆளுநர் கூறுகிறார். மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் இந்துத்துவா கும்பலுக்கு அந்த தேவையுள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியையும், உரிமையையும் காப்பாற்ற வேண்டியத் தேவை எங்களுக்கு உள்ளது. இந்த போரில் எத்தனை மோடிக்கள் வந்தாலும், எத்தனை இரவிகள் வந்தாலும் மக்களின் மொழி உணர்வை ஒரு போதும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MUST READ