Homeசெய்திகள்தமிழ்நாடுபனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!

பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!

-

 

பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!
Video Crop Image

ராமேஸ்வரத்தில் உள்ள தீவு முனியப்ப சுவாமி திருக்கோயிலில் பனை தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

பனை சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெள்ளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தீவு முனியசாமிக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் 100- க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள், சேவல்களைப் பலியிட்டு, சாமிக்கு பனை ஓலை பட்டையில் சோறு, கறி படைத்து, பனை ஓலை பட்டையில் கறிவிருந்து கொடுத்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!
Video Crop Image

இந்த விழாவில், பனை மரம் சார்ந்த தொழில் செய்து வரும், 1,000- க்கும் மேற்பட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

விழாவில், தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், மழை பெய்து நாடு செழிக்கவும், கொரோனா போன்ற நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பாரம்பரியமான படையல் விழாவை பல ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டம் பனை தொழிலாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

MUST READ