Homeசெய்திகள்தமிழ்நாடுவாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜக தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை - ஆர்.எஸ்.பாரதி 

வாரிசு அரசியலைப் பற்றி பேச பாஜக தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை – ஆர்.எஸ்.பாரதி 

-

திமுகவைப் பற்றி விமர்சிக்கவும், வாரிசு அரசியலைப் பற்றி பேசவும் அண்ணாமலை உட்பட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் யாருக்கும் தகுதி இலலை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் மறைந்த மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கரின் தந்தையுமான ‌பரசுராமனின் 32வது நினைவு தினத்தைஒட்டி ஆயிரம் பேருக்கு மதிய உணவு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவெற்றியூர் கே.வி.குப்பம் பகுதியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினர்.

திமுக ஊழல் பட்டியல்: சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளேன் - அண்ணாமலை பேட்டி..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழிசை சௌந்தர்ராஜன் வாரிசு அரசியலை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது அவர்களும் வாரிசு அரசியலில் தான் வந்தவர்கள் என்று கூறினார். வாரிசு அரசியல் தான் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்திய அரசியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசுகளாக இருப்பவர்கள்தான் தலைவராக கொண்டு வருகிறார்கள். இல்லாதவர்கள் தான் அதைப் பற்றி பேசுகிறார்கள். இதில் அர்த்தமில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார்.

திமுகவை பற்றி விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு சரித்திரம் தெரியாது பூக்கோலம் தெரியாது ஒன்றுமே தெரியாது. உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டார் என்று சொல்வார். முன்னாள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி பாஜகவிற்கு மூன்று சக்கரமாக இருந்தவருக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து பாஜக தலைவர் ஆக்கிவிட்டார்கள். இவர் எங்கிருந்து பேசுகிறார் என்று தெரியவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்

RS Bharathi

பாரதிய ஜனதா கட்சியில் எத்தனை பேர் வாரிசுதாரர் பதவியில் இருக்கிறார்கள் என்று பல பட்டியல் போட்டு காண்பித்துள்ளோம். 50 வருடமாக இதே கூறிக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் என்று கூறிச் சென்றவர்கள் எல்லாம் எங்களோடு வந்துவிட்டார்கள். வாரிசு அரசியல் சட்டரீதியாக இந்திய அரசியலில் அங்கீகரிக்கப்பட்டது அதனால்தான் இந்தியா ஒழுங்காக உள்ளது. இதனால் காஷ்மீர் அழிந்து விட்டதா? ஆந்திர பிரதேசம், ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியல் தொடர்கிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ராமதாஸ் மோடியை பார்த்து கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை கொடுக்காத வன்னியர்களுக்கு நாலு பேருக்கு மந்திரி பதவி முதலமைச்சர் கொடுத்துள்ளார். எந்த ஆட்சியிலும் இதுபோன்று கொடுத்தது கிடையாது. அது மட்டுமில்லாமல் வன்னியர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் போல இதுவரை யாரும் செய்தது கிடையாது. வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் திமுக தான். 20% ‌சதவீதம் பட்டியல் போட்டு காட்டியுள்ளோம். இதுவரை எந்த ஆட்சியிலும் வன்னியர்கள் நான்கு பேர் அமைச்சராக இல்லை. இதே போன்று மத்திய அரசையும் யாராவது கேட்டு வாங்கலாம். அவர் மகன் எம்பியாக உள்ளார். அவர் கேட்டு வாங்கினால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தீபஒளி போதை விபத்து-20 பேர் உயிரிழப்பு 

அதிமுக இன்று நான்கு கூறாக இருப்பதற்கு காரணம் என்ன. ஆகையால் ஒரு வலுவான அரசு அமைய வேண்டும் என்பதற்காக தான் உதயநிதிக்கு பொறுப்பு கொடுத்துள்ளார். செந்தில்பாலாஜி வழக்கு முடிக்கப்பட்ட வழக்கு. செந்தில் பாலாஜி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதில் நான் சொல்ல விரும்பவில்லை. திட்டமிட்ட பழிவாங்குவதற்காக மேல்முறையீடு செய்து பிஜேபி முயன்றார்கள். ஆனால் அதில் செந்தில் பாலாஜி உறுதியாக இருந்தார். Mமகாராஷ்டிராவில் சரத் பவாருடைய தம்பி போன்று பழிவாங்கலாம் என்று பார்த்தார்கள் உறுதியாக இருப்பதினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று நீதிமன்றத்தில் விட்டு விட்டார்கள். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வராத நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் பதவி கொடுக்கும்பொழுது, செந்தில்பாலாஜி அதே பதவி கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார்.

MUST READ