வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 01- ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 02- ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!
தமிழகத்தில் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஸியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.