வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென் பகுதிகளில் வீசும் நிலையில், மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலுக்குறைந்து காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் அக்டோபர் 25- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 8% அதிக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் இயல்பை விட 75% அதிகமாக மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.