Homeசெய்திகள்தமிழ்நாடு2,000 அல்ல... 10000 கோடி கொடுத்தாலும் நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம்...

2,000 அல்ல… 10000 கோடி கொடுத்தாலும் நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம் தென்னரசு உறுதி

-

- Advertisement -

”2,000 கோடி ரூபாய் அல்ல… பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிடக் கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளதாக” அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.2,000 அல்ல... 10000 கோடி கொடுத்தாலும்  நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம் தென்னரசு உறுதிதமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-நம் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்ச் 15-ம்ந தேதி அன்று வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 5-வது நாளாக இன்றும் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரையில், ” மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி என எதையும் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறது ஒன்றிய அரசு. அவர்கள் 2000 கோடி ரூபாய் அல்ல, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிட கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளாா்.

வடக்கே இருந்து வரும் ஆதிக்கத்திற்கு எந்த காலத்திலும் தமிழ்நாடு தலைவணங்கியதில்லை என பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதற்கு வரலாற்று சான்றுகளாக அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி சக்கரம் தமிழ்நாட்டில் சுழலவில்லை என்றும் கனிஷ்கர் ஆட்சி என்பது தெற்கே வந்ததில்லை. அவுரங்கசீப்பினாலேயே தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. ஏன் சிவாஜியால்கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை” என தங்கம் தென்னரசு எடுத்துரைத்தாா்.

எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!

MUST READ