Homeசெய்திகள்தமிழ்நாடுபாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்களுக்காக ஆஜராகப் போவதில்லை - வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்களுக்காக ஆஜராகப் போவதில்லை – வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்

-

- Advertisement -

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆஜராக போதிவதில்லை – மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவியை  அதேப்பள்ளி ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ், ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.மாணவி புகாரின் பேரில் மூன்று ஆசிரியர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்களுக்காக ஆஜராகப் போவதில்லை  - வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு தலைமையில் நடந்தது. இதில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்குகளில் ஜாமின் மனுக்கள் மீது அல்லது வழக்குகளில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோர் தொடரும் வழக்குகளுக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் முன்னின்று மனு தாக்கல்  செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

MUST READ