Homeசெய்திகள்தமிழ்நாடு`ஒரு கட்சியின் கொடி மட்டுமல்ல; வருங்கால தலைமுறையின் வெற்றிக் கொடி இது! - விஜய்

`ஒரு கட்சியின் கொடி மட்டுமல்ல; வருங்கால தலைமுறையின் வெற்றிக் கொடி இது! – விஜய்

-

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இந்தக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். கொடியேற்றி வைத்த பிறகு தவெக கட்சி பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்சிப் பாடலில் என்னென்ன வரிகள் இடம்பெற்றுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

 `ஒரு கட்சியின் கொடி மட்டுமல்ல; வருங்கால தலைமுறையின் வெற்றிக் கொடி இது! - விஜய்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தாம் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.  2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக கட்சிக் கொடியை அறிமுகம் செய்ய முடிவு செய்தார்.

 `ஒரு கட்சியின் கொடி மட்டுமல்ல; வருங்கால தலைமுறையின் வெற்றிக் கொடி இது! - விஜய் கட்சிக் கொடி:

அதன்படி, இன்று காலை சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் விஜய்யின் பெற்றோரும் பங்கேற்றனர். பிளிறும் யானைகள் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். கட்சி கொடியை ஏற்றி வைத்த பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது… என இந்த பாடல் தொடங்குகிறது. போர்க்களத்தில் யானைகளுடன் சென்று சண்டையிடுவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது.. என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள்ளன.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களாகிய என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் சரி இன்று நமது கழக கொடியை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் உழைக்க வேண்டும்.  புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள், கொடி மற்றும் கொள்கைக்கான விளக்கத்தை விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.

MUST READ