வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் பாஜகவின் திட்டம். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றச்சாட்டு.சென்னை, எழும்பூர்,இக்சா மையத்தில், பொதுப் பள்ளிக்காண மாநில மேடை சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏன் வரவேற்கத்தக்கது அல்ல என்பதை விவாதிக்க www.thesamacheerkalvi.in என்ற புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது, இந்த வலைதளத்தை சென்னை மாநகராட்சி பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவரின் பெற்றோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இந்த வலைதளத்தைப் பற்றி பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, ”தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒரு வலைதளத்தை தொடங்கி பள்ளிகளுக்கு முன்னால் நின்று மாணவர்களிடம் கையொப்பம் வாங்குகிறேன் என்கிற அடிப்படையில பல பொய்யான தகவல்களை பள்ளிகளின் முன்னாள் எழுதி வைத்திருப்பதையும், தொடர்ந்து பல பொய்யான செய்திகளை அவர்கள் பகிர்ந்து வருவதையும் கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கை 2020 முதல் வரைவு அறிக்கை மீது பல விமர்சங்களை வைத்ததாகவும் ஆனால் ஒன்றிய அரசியல் அதை செவிமடுக்கவில்லை எனவும் வரைவு அறிக்கையில் சொன்னதை மட்டுமே அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
மும் மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள யாராலும் ஏற்க முடியாது ஒன்று, உண்மையில் மும்மொழி கொள்கையை எந்த மாநிலம் ஆவது பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறி . தேசிய கல்விக் கொள்கை 2020 நிராகரிக்க என்ன காரணம், அதற்கு மாற்றாக என்ன இருக்க வேண்டும் என www.thesamachirkalvi.In என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளோம். இருமொழி கொள்கை பிரச்சனையை கட்சி சார்த்து அல்லாமல் அறிவியல் பூர்வமாக அணுகவேண்டும், குழந்தைகள் பிறந்து வளரும் சூழலில் பேசப்படும் மொழியிலேயே ஆரம்ப கல்வியை தொடங்கினால் அது குழந்தைக்கு ஆர்வத்தை தந்திடும், உடனடி பயன்பாடு என்ற வகையில் குழந்தைகள் ஆங்கிலமும் கற்கின்றனர்.
தான் வாழும் சூழ்நிலையில் பயன்படுத்தாத ஒரு மொழியை கூடுதல் மொழி பாடமாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அத்தகைய நிர்பந்தம் குழந்தைகளுக்கு கூடுதல் சுமையாக அமையும். தேவையில்லாத ஒரு சுமையை குழந்தை பருவத்தில் மாணவர்கள் மீது திணிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே மூன்று மொழிக் கொள்கையை கற்க வேண்டும் என அறிவுறுத்தும் பள்ளி பாடத்திட்ட கோட்பாட்டை ஏற்க இயலாது என உறுதியுடன் கூறுகிறோம்.
சமமான கற்றல் வாய்ப்புக்கு எதிராக பி எம் ஸ்ரீ பள்ளிகள் உள்ளது, பி எம் ஸ்ரீ பள்ளிகள் தான் ஆகச்சிறந்த பள்ளிகள் என்றால் மற்ற பள்ளிகளின் நிலை என்ன பி எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை இந்திய அரசின் அரசியலமைப்பு சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 க்கு எதிரானது. பள்ளியில் உருவாகும் உபரி பணத்தை வேறு கல்வி நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய அனுமதிக்கவும் வழி செய்வதனாலும் மொத்தமாக அரசு பள்ளிகளை அழித்துவிட்டு இறுதியாக தற்போது சைனிக் பள்ளிகளின் நிர்வாக பொறுப்பை எவ்வாறு தனியாரிடம் தரப்பட்டுள்ளதோ அது போல பி எம் ஸ்ரீ பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் சூழ்ச்சி நிறைந்தது ,தேசிய கல்விக் கொள்கை 2020.
இந்திய அரசை பிரதமர் நரேந்திர மோடியை மத்திய கல்வி அமைச்சரை கேள்வி கேட்கிறோம். இத்தனை விஷயங்களை விட்டுவிட்டு புதிதாக மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க சொல்கிறீர்கள் அப்படி படித்தால் இலவசமாக அரசு கல்லூரியில் பட்டப் படிப்பு வாய்ப்பு கிடைக்குமா? 10 ஆண்டு காலத்தில், ஒன்று பொருளாதாரம் வளரவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால், கல்வியை இலவசமாக வழங்குங்கள்.
உயர்கல்வியில் இன்றுள்ள சமூக நீதியின் அடிப்படையிலான கட்டமைப்பை முற்றிலுமாக சிதைத்து பெரும் பகுதி மாணவர்களை உயர்கல்வி ழுமையாக படிக்க முடியாத நிலையை உருவாக்க முயற்சி புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. கல்வியில் செயல்பாடு இல்லாதவர்களையும் துணைவேந்தர் பணிக்கு நியமிக்கலாம். மாநில அரசுக்கு அதன் உயர்கல்வி நிறுவனங்களில் எந்த முடிவு எடுக்கும் அதிகாரமும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 முன்வைக்கும் அனைத்தும் மாணவர்கள் நலனுக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்வைக்கும் சமத்துவ கோட்பாட்டிற்கும் ,கூட்டாட்சி தத்துவத்திற்கும், எதிரானதாக அமைந்துள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க இயலாது.
மாணவர்களின் பள்ளிக்கல்வி செயல்பாட்டிற்கு உரிய நதியை உரிய காலத்தில் ஒன்றிய அரசு தர மறுப்பது குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கும் செயலாகும், மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் ஒன்றிய அரசுக்கு இல்லை .மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா உருவாக்கும் பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020, நடைமுறைப்படுத்தவே இந்த உயர் கல்வி ஆணைய வரைவு மசோதா உருவாக்கப்படுகிறது.
இந்த மசோதா சட்டமானால் மாநில அரசிற்கு கல்வித் துறையில் எந்த அதிகாரமும் இருக்காது என்பதுடன் மாநில அரசு கல்லூரிகள் முழுவதும் செயல்பட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இந்த வரைவு மசோதா மூலம் மாநில அரசின் அதிகார எல்லையில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. தமிழ்நாடு மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் 2021 குடியரசு தலைவர் ஒப்புதலை விரைந்து பெற்றிட அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் அவர்கள் திட்டம்.
இந்திய மொழிகளை காப்பாற்றிய பெரியார்… வெளிவராத தகவல்களை பகிர்ந்த செந்தலை கவுதமன்!