ஜூலை 30 ரேசன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ள நிலையில், தருமபுரியில் இந்த திட்ட விண்ணப்ப பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் நடைபெற்றுவருகிறது. தகுதிவாய்ந்த ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
இதனைமுன்னிட்டு, வரும் ஞாயிறு அன்று (ஜூலை 30) அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக நியாய விலைக்கடைகளுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி விடுமுறை விடப்படும் என உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.