Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

-

- Advertisement -

பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. “நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம்” ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.

வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்படத்தக்கது

MUST READ