Homeசெய்திகள்தமிழ்நாடு'நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்' என அறிவிப்பு!

‘நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்’ என அறிவிப்பு!

-

 

'நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்' என அறிவிப்பு!
File Photo

தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

இது தொடர்பாக உணவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து நாட்களும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், அனைத்துப் பொருட்களையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பல குடும்பத்தினர் முன் கூட்டியே அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை வாங்குவார்கள் என்பதால், இருப்பு சரியாக உள்ளதாக என்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையும் தொடங்கவுள்ளதால், மாதத்தின் எந்த நாளில் மக்கள் பொருட்களைக் கேட்டாலும், வழங்க தயாராக இருக்க வேண்டும் என நியாய விலைக் கடைகளின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு எதாவது சிரமம் இருந்தால், வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு, புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ