சென்னையை அடுத்த அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருக்கு பாலம் மற்றும் கொரட்டூர் ஏரிக்கு அருகாமையில் 1 ஏக்கர் பரப்பளவில் எஸ்.எஸ் எலக்ட்ரானிக் என்ற பெயரில் பழைய எலக்ட்ரானிக் பொருட்களான பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவென் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை வாங்கி, அதனை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் விதம் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.
பிளாக்பஸ்டர் பக்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா!
இந்த தொழிற்சாலையில் 50- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று (பிப்.01) மாலை 06.00 மணியளவில் திடீரென தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதாக அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில், அது தோல்வியில் முடிந்ததால், அருகே உள்ள வில்லிவாக்கம், ஜெ.ஜெ நகர், கொளத்தூர், ரெட் ஹில்ஸ் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 5 தீயணைப்பு வாகனங்களை வரவழைத்த நிலையில் 50- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
சைரன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?
சுமார் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிற்சாலை முழுவதும் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புடைய மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.