Homeசெய்திகள்தமிழ்நாடுபழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

-

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. 2022-ல் அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது என்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது” என்று தெரிவித்த அவரின் பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்ததற்கு பதிலளிக்கையில் அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

அதனை தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி இன்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஒய்வூதியத்திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் சாத்திய கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

MUST READ