Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது" என அறிவிப்பு!

“தமிழகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என அறிவிப்பு!

-

 

"தமிழகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது" என அறிவிப்பு!
File Photo

மின்சார ரயில் சேவை சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று (அக்.24) மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஒருதரப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக் காவல்துறையினர்!

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறான வழிகாட்டுதல்களால் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்துவதாகவும், இதனால் பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர் விடுமுறை முடிந்து, இன்று (அக்.24) மாலை பயணத்திற்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவுச் செய்திருக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க தமிழக அரசு ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்பழகன், “நாங்கள் அரசுக்கு உறுதுணையாகவே செயல்படுகிறோம். அரசு 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கினால், நாங்கள் 150 பேருந்துகள் இயக்குகிறோம். அரசுப் பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் பயணித்தால், ஆம்னி பேருந்துகளில் 50,000 பேர் பயணிக்கின்றனர். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை வசூலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ