- Advertisement -
வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்
சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியினை கடந்த 26 ஆம் தேதி துவக்கியது. விளை நிலங்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது. இதில் உள்ள நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்தன. ஆனால் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை.
இந்நிலையில் இன்று 7வது நாளாக பணிகள் துவங்கி உள்ளது. வளையமாதேவி கிராமத்தில் இருந்து அருகில் உள்ள தர்மநல்லூர் கிராமம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல் பகுதிகளில் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் இந்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் 10 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் வெட்டப்பட்டு மண்கள் அகற்றப்பட்டு வருகிறது. பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் வளையமாதேவி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.