தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன் (55) கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் பார்த்திபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்கு பின் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.