Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

-

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் 12-ம் தேதி திறக்கப்பட்ட நீர் இன்று காலை தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. கல்லணையில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் தஞ்சை எம்.பி பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தண்ணீரை குறுவை சாகுபடிக்காக திறந்துவிட்டனர். முதல் கட்டமாக காவிரியில் வினாடிக்கு 500 கன அடி, வெண்ணாற்றில் 500 கனஅடி, கல்லணை, கொள்ளிடத்தில் 500 கனஅடி கல்லணை கால்வாய் ஆற்றில் 100 கன அடி என 1600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நீர் வரத்து அதிகரித்ததும் அதற்கேற்ப தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும். உரிய காலத்தில் நீர் திறந்ததாலும், பாசன ஆறுகள் தூர்வாரியதாலும் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மொத்தம் 3, 42,696 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், மேற்கண்ட மாவட்டங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்யும்.

MUST READ