Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை - ஓபிஎஸ்

மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை – ஓபிஎஸ்

-

- Advertisement -

மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என மத்திய பட்ஜெட் குறித்து ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட். மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட். நல்ல பட்ஜெட். ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எந்தவித காரணங்களும் கிடையாது.அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கை 5 ஆண்டுகளில் அடைவோம் என்று கூறி, மூன்றாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்,

தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறார். பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 11,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு அரசு கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பாதிப்புகளுக்கு உண்டான அரசாணையின் படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை. சசிகலா தான் அதிமுகவின் இணைப்பிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

 

 

MUST READ