தமிழகத்தில் நாளை (18.12.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.