முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் இரு போக விவசாய நிலங்களுக்கு முதல் போக நெல் விவசாயத்திற்கு பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கண்ணாடி தண்ணீர் இன்று முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கேரள மாநிலம் தேக்கடி தலை மதகு பகுதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கின்றார். இதனிடையே இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.45 அடி (142 அடிக்கு). அணைக்கு நீர்வரத்து 155 கன அடி, அணையின் நீர் இருப்பு 2,348.45 மில்லியன் கனஅடியாக உள்ளது.