‘எங்களை இயக்குநர் ஏமாற்றிவிட்டார்’ ஆஸ்கர் புகழ் தம்பதி பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு
ஆஸ்கர் ஆவண படத்தில் நடித்த தம்பதிகள், தங்களை படத்தின் இயக்குனர் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வளர்ப்பு யானைகள் யானைகள் முகாமில் 2019 ஆம் ஆண்டு யானைகள் பராமரிப்பு குறித்து முதுமலையில் யானை பராமரிப்பு தம்பதிகளான பொம்மன் , பெள்ளி மற்றும் ரகு, பொம்மி இரு யானைகளை வைத்து கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் என்ற பெண் இயக்குநரால்(the elephant whisperes) ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த வருடம் ஆஸ்கர் விருது இறுதி பட்டியலுக்கு சென்று சிறந்த ஆவண படமாக அறிவிக்கப்பட்டது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அறிமுக இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய 41 நிமிட குறும்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் வென்றதும் உலகளவில் கவனம் பெற்றது. பொம்மன் மற்றும் பெல்லி ஜோடிக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கின.
இந்த நிலையில் ஆவணப்படத்தின் இயக்குநர் இதுவரை தங்களை கண்டு கொள்ளவில்லை எனவும் குறிப்பாக சமூக வலைதளங்களில் தங்களுக்கு கார் மற்றும் வீடு மற்றும் அவரது வங்கி கணக்கில் ஒரு தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறியதாகவும், ஆனால் இதுவரை அந்த இயக்குநர் எங்களது அலைபேசி எண்ணை கூட எடுப்பதில்லை எனவும், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வரும் சூழ்நிலையில், பழங்குடியின ஆஸ்கர் தம்பதிகளை ஏமாற்றி விட்டார்களா என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.