Homeசெய்திகள்தமிழ்நாடுஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு

ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு

-

ஆஸ்கர் வென்ற முதுமலை தம்பதியினர் முதல்வருடன் சந்திப்பு

‘The Elephant Wishperers’ ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றதையடுத்து முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

mkstalin

ஆஸ்கர் வென்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன் – பெல்லி தம்பதியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பொம்மன், பெள்ளி தம்பதிக்கு ரூ.2 லட்சம் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பொம்மன், பெள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசும், தலா ரூ.1 லட்சமும் வழங்கி வாழ்த்து கூறினார். அப்போது கோவை, நீலகிரியில் யானை பாகன்கள் வசிக்க உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும், யானை பராமரிப்பாளர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த வீடுகள் கட்ட நிதியுதவி என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அத்துடன் முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும், பணியாளர்கள் 91 பேருக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

MUST READ