பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் ஆகும்.ஆனால் இது தற்போது ஒட்டன்சத்திரத்தின் அருகே தங்கச்சியம்மாபட்டியில் இயங்கி வருகிறது.
இந்த காய்கறிமார்க்கெட்டில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன்களில் காய்கறிகள் சென்னை, கோவை,உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மேலும் வெளிமாநிலங்களான கேரளா,மும்பை,ஆந்திரா,கர்நாடகா,போன்ற பல்வேறு மநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.ஆனால் கேரளாவிற்கு மட்டும் 80 சதவீதம் காய்கறிகள் தினமும் அனுப்பபட்டு வருவது குறிப்பிடதக்கது.
இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் கேரளாவிலிருந்து காய்கற்கள் வாங்குபவர்கள் யாரும் மார்க்கெட்டிற்கு வராததால் மார்க்கெட்டே விரிச்சோடி காணப்பட்டது.உள்ளூர் வியாபாரிகள் மட்டும் காய்கறிகளைக் கொண்டு வந்திருந்தனர் . இதனால் காந்தி மார்க்கெட்டில் நேற்றுமட்டும் ரூ.2 கோடி மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.