Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது"- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது”- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

-

 

"இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது"- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!

உலகப் பிரசித்திப் பெற்ற பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, “இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. இந்து அல்லாதோர், இந்துக் கடவுள் மீது நம்பிக்கை அல்லாதோரை கொடிமரம் தாண்டி அனுமதிக்கக் கூடாது. இந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் வழிபட விரும்பினால் கோயிலில் பதிவேடு வைக்க வேண்டும். கடவுளின் மீது நம்பிக்கைக் கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எழுத வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

இந்த உத்தரவு பலதரப்பு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ