பல்லடம் அருகே நான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த வெங்கடேஷ், விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் சுட்டு பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டு அருகே மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதால் செந்தில் குமார் என்பவரும், அவரது குடும்பத்தினரும் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது தப்பியோட முயன்ற போது அவரது கால் எலும்பு உடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சூழலில், தேடப்பட்டு வந்த வெங்கடேசும், முத்தையாவும் நேற்று (செப்.07) திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!
கொலை நிகழ்ந்த இடத்திற்கு வெங்கடேஷை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, அவர் தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. அதனால் இரண்டு கால்களிலும் சுட்டு அவரை பிடித்ததாக பல்லடம் டி.எஸ்.பி. சௌமியா தெரிவித்துள்ளார். இரண்டு கால்களும் உடைந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வெங்கடேஷை, திருப்பூர் எஸ்.பி. சாமிநாதன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.