Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு

-

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்புபாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதியை அறிவித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இது சுமார் 2.3 கிமீ நீளம் கொண்டது. பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கி பின்னர் அதிகாரப்பூர்வமாக 1914 ஆண்டு கட்டப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை கொண்டது.

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்புஇந்த ரயில் பாலம் தமிழகத்தின் பெரு நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இனைக்கிறது. பாம்பன் ரயில் பாலத்திற்கு நடுவே பெரிய கப்பல்கள் செல்வதற்கு ஏற்ப பாலத்தின் நடுவில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

தூக்கு பாலம் சேதம் அடைந்ததால் 2022 ஆண்டில் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாக 2020 ஆம் ஆண்டிலேயே ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் பழைய பாளத்திற்கு அருகிலேயே தொடக்கப்பட்டது.

2022 -ல் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்கதர்கள் மண்டபம் ஸ்டேஷனில் இரங்கி பஸ் மற்றும் பிற சாலை போக்குவரத்துகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்று வந்தனர்.

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு10 நாட்களுக்கு முன் ரயில்வே வாரிய உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் பாலப்பணியை ஆய்வு செய்தார். 1.6 கி.மீ தூரம் பாலப் பணிகள் 100% முடிவடைந்து நிலையில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இரு ரயில் இன்ஜின்களை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தி புதிய பாலத்தின் உறுதி தன்மையை ரயில்வே வாரிய உறுப்பினர் அனில் குமார் கண்டேல்வால் மற்றும் அவருடைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அனில் குமார் கண்டேல்வால்தற்போது பாம்பன் பால கட்டுமான பணிகள் 90% மேல் முடிவடைந்துள்ள நிலையில் மீதம் உள்ள 10% பணிகள் இன்னும் இரண்டு மாதக் காலத்தில் முடிவடைய வாய்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி இன்று மோத உள்ள ஆட்டங்கள்

100% கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் பாலத்தின் மொத்த நீளமான 2.3 கி.மீ தூரத்திற்கு ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் அட்டோபர் 1 ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு

மேலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் ரயில் நிலையம் மறுசீரமைக்கும் பணிகளும் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவு பெரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ