செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு நேரில் ஆய்வு செய்தார். மறைமலைநகரில் நடைபெறவுள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் இந்த திடீர் ஆய்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
கோரிக்கை, புகார் தொடர்பாக மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காட்டங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (அக்.17) மாலை 05.00 மணிக்கு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
“கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது”- நீதிபதி கருத்து!
முதல் நாளான இன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சட்டம்- ஒருங்கு குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வுச் செய்யவுள்ளார்.