Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

-

- Advertisement -

 

https://www.apcnewstamil.com/news/avadi/avadi-lady-police-singing/70011#google_vignette

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

பஞ்சு மிட்டாயில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனக் கலவை இருப்பதாக எழுந்த புகாரின் பேரில், தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாலையோர பஞ்சு மிட்டாய் விற்பனைகள், பஞ்சு மிட்டாய் உற்பத்தி நிறுவனங்களில் அதிரடி ஆய்வுகளை நடத்தினர். அத்துடன், பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பினர்.

ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்- 2006- ன் படி பாதுகாப்பற்ற உணவு என தெரிய வந்ததால் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

செயற்கை நிறமூட்டி கொண்டு தயாரிப்பது, திருமண நிகழ்வு, பொது நிகழ்ச்சிகளில் பஞ்சு மிட்டாய் பரிமாறுவது சட்டப்படி குற்றமாகும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, கோடைக்காலம் நெருங்கும் சூழலில், சாலையோர ஐஸ்க்ரீம் வியாபாரிகள், சாலையோர குளிர்பானங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரசாயனம் கலந்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீமால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டிபிசிசி-யின் தலைவர் சடகோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ