காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பரந்தூர் விமான நிலையத்திற்கு 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூபாய் 19.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு, பரந்தூர் விமான நிலைய நிலம் எடுப்புப் பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்களை நியமித்து அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 15- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கை, அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் இருக்கும் நிலையில், இரண்டாவது அதிநவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால், தங்கள் விளை நிலங்கள், வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.