Homeசெய்திகள்தமிழ்நாடு'பரந்தூர் விமான நிலையம்'- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!

‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!

-

 

'பரந்தூர் விமான நிலையம்'- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!

பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கு அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பித்துள்ளது.

‘சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு’- 2 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில், பசுமை விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. பரந்தூரில் சுமார் ரூபாய் 32,704 கோடி மதிப்பீட்டில் 5,368 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் விமான நிலையம் கட்டமைக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

இந்த சூழலில், பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே, விண்ணப்பித்திருந்த நிலையில் சில மாற்றங்களுடன் மீண்டும் விண்ணப்பித்துள்ளது TIDCO. பரந்தூரில் 4 கி.மீ. நீளமுள்ள 2 விமான ஓடுப்பாதைகளுடன் விமான நிலையம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

MUST READ