காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்புக்கான முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொடவூர் கிராமத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்துறை வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய தகவல்….
“நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தங்களது ஆட்சேபனைகளை தனி மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு அனுப்பலாம். ஆட்சேபனைகள் மீது வரும் ஏப்ரல் 04- ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்” என தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…
சென்னை மீனம்பாக்கத்தில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் இருக்கும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.