
சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக, 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 03) விசாரணை நடைபெற்றது.
அப்போது, மெரினா கடலில் நினைவுச் சின்னம் அமைப்பது கடல் வளத்தையும், கடலின் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், குறிப்பாக, கடலையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள 32 மீனவக் கிராமங்கள் பாதிக்கப்படும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி
இதையடுத்து, கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.