Homeசெய்திகள்தமிழ்நாடுஇறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா

இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா

-

இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவரும் அவரது மனைவி அமுதாவும் வசித்து வருகின்றனர்.

செல்லப்பிராணிக்கு படத்திறப்பு விழா நடத்திய நாகை தம்பதி- ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

இவர்களும் திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைகள் இல்லாததால் குழந்தை போல் பாசமாக அப்பு என்ற நாய்க்குட்டியை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். தர்மலிங்கம் தனது வீட்டின் அருகே மல்லிகை கடை வைத்துள்ளார். மளிகை கடைக்கு அருகே நாய் அப்பு எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற போது அந்த வழியே வந்த லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது.

இதைப் பார்த்த தர்மலிங்கமும், அவரது மனைவியும் கதறி அழுதனர்.பின்னர் நாய் அப்புவின் உடலுக்கு மலர்மலை அணிவித்து அவர்களது தோட்டத்தில் புதைத்து அஞ்சலி செலுத்தினர். இறந்த நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்தனர். படத்திறப்பு விழாவிற்கான பத்திரிக்கையை வாட்ஸ் அப் மூலம் உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு 10வது நாளான நேற்று அவர்களது இல்லத்தில் நாய் அப்புவின் புகைப்படம் அலங்காரம் செய்யப்பட்டு படதிறப்பு விழா நடைபெற்றது.

அப்புவின் திருவுருவப் படத்தினை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். அங்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நாய் அப்புவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாய் அப்புவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வைத்து படையல் இடப்பட்டது.

MUST READ