ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி சுற்றுலா தலத்தில் குவிந்த உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து நேரில் கண்டு ரசிப்பதற்காக காலை முதலே சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பு.
பின்னர் நுழைவு சீட்டு பெற்று ஆர்வமுடன் சுற்றுலா படகில் சவாரி செய்து குடும்பத்தினர் நண்பர்களுடன் சுற்றுலா பயணிகள் ஆனந்தம். உலக சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள குமரி சுற்றுலா தலமாகும். இங்கு கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து நேரில் கண்டு ரசிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குமரிக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி இன்று குமரி சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள். அவர்கள் அதிகாலை சூரியன் உதயத்தை கண்டு ரசித்தார்கள். பின்னர் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து நேரில் கண்டு ரசிப்பதற்காக காலை முதலே சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் சுற்றுலா படகு குழாமில் காத்திருந்தார்கள்.
பின்னர் நுழைவு சீட்டு பெற்று ஆர்வமுடன் சுற்றுலா படகில் சவாரி செய்து குடும்பத்தினர் நண்பர்களுடன் சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்து வருகிறார்கள்.