கேரளாவில் கொரோனா தொற்று பரவுவது குறித்து தமிழ்நாடு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், இதுவரை எந்தவொரு அசாதாரணமாக காய்ச்சலும் கண்டறியப்படவில்லை எனவும், தமிழ்நாடு அரசு மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ககந்திப்சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ மாணவர்களுக்கான செயற்கை பல்மருத்துவம், ஈறு அறுவை சிகிச்சை மற்றும் பல் பாதுகாப்பு, வேர் சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா ,கேரளா,கர்நாடகா, டெல்லி ,கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பல் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர் .அவர்களுக்கு பல் மருத்துவ வல்லுனர்கள் செயற்கை பல் மருத்துவம், ஈறு அறுவை சிகிச்சை மற்றும் பல் பாதுகாப்பு, வேர் சிகிச்சை குறித்து எடுத்துரைத்தனர். முன்னதாக இந்த கருத்தரங்கை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
பருவமழை தொற்று ஏற்பாடமல் தடுக்க தினந்தோறும் 300 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இன்புளுன்சா தொற்று ஏற்பட்டவர்கள் முகம் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து சபரிமலை பக்தர்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் அச்சமடைய தேவயில்லை .இதுவரை எந்தவொரு அசாதாரணமான காய்ச்சலும் கண்டறியப்படவில்லை என்ற அவர் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், மக்களும் முன்னெச்சரிக்கையாக தற்காப்பாக இருக்க வேண்டும் என்றார்.