தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்காக, மதுரை, நெல்லை உள்ளிட்டப் பேருந்து நிலையங்களில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
கனமழை: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்!
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், சென்னை திரும்புவதால் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதைக் காண முடிந்தது.
தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக, ஏராளமானோர் நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்தனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் உள்பட 8 ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல், முன்பதிவில்லாத அந்தியோதயா ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக, மதுரையில் இருந்து வரும் நவம்பர் 15- ஆம் தேதி வரை 140 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மதுரையில் இருந்து சென்னை செல்வோருக்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்தும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோருக்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன.