நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பூரில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் கூட்டணி மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளராக வட சென்னை மக்களவைத் தொகுதியில் களம் காணுகின்ற அன்பு சகோதரர் @DrKalanidhiV ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு பெரம்பூரில் இன்று வாக்கு சேகரித்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிற திராவிடல் மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களையும் – ஒன்றிய அரசு இடியாக இறக்குகிற மக்கள் விரோத சட்டங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி, ஏன் #INDIA கூட்டணி வெல்ல வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். நாடு காக்க, நாற்பதிலும் வெல்வோம்! எனக் கூறினார்.