பெரியார் பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
“அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் மே 2023 ஆம் பருவத்தேர்வுகள் மே 23- ஆம் தேதி முதல் ஜூன் 17- ஆம் தேதி வரை நடைபெற்றது.
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3
இத்தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 14) வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் இணைவுப் பெற்றக் கல்லூரிகளிலும் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற ஆன்லைன் மூலம் வரும் ஜூலை 27- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.