Homeசெய்திகள்தமிழ்நாடுகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!

-

- Advertisement -

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிரமடையும் விசாரணை!
File Photo

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

"இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குதான் தெரியும் என்றும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார்.அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

sasikala

இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லையே, எதிர் தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ