Homeசெய்திகள்தமிழ்நாடுபெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

-

- Advertisement -

 

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
Video Crop Image

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வெற்றிகரமான 3வது வாரத்தில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’… உணர்ச்சிவசப்பட்ட நடிகர் சதீஷ்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அழகிரிநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பில் கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவள்ளூரில் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதர் கோயிலின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திரளான பக்தர்கள் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை அழகிரிநாதர் திருக்கோயிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்… ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற உலகளந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பில் திரளானோர் பங்கேற்றனர்.

MUST READ