Homeசெய்திகள்தமிழ்நாடுபிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

-

- Advertisement -

 

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
File photo

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நேற்றிரவு (அக்.29) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் ரசாயன மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கும் பரவியதால், மளமளவென எரியத் தொடங்கியது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, ஜெ.ஜெ.நகர், ஆவடி, மாதவரம் வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.

பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலையில், கெமிக்கல் பேரல்கள் வெடித்துச் சிதறியதால், அருகில் சென்று தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ரோபோ ஸ்கை லிப்ட் கொண்டு வரப்பட்டு, விடிய விடிய போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

MUST READ