Homeசெய்திகள்தமிழ்நாடு+2 தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவியர் சாதனை

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவியர் சாதனை

-

- Advertisement -

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு- மாணவியர் சாதனை

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களைவிட மாணவியர் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 96.38 சதவீதம் பேரும், மாணவர்களில் 91.45 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் 97.59 சதவீதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதேபோல் தமிழில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3,909 பேரும், உயிரியலில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4,618 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

MUST READ