பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (ஜன.02) திருச்சிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, 33,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ரூபாய் 19,580 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிச.02) அடிக்கல் நாட்டுகிறார். ரூபாய் 1,112 கோடி மதிப்பிலான திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ரூபாய் 9,000 கோடியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கும், மதுரை- தூத்துக்குடி இடையே 160 கி.மீ. தூரத்திற்கு இரட்டை ரயில் பாதைத் திட்டத்திற்கும், திருச்சி- மானாமதுரை- விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கும் திட்டத்திற்கும், சேலம்- ஓமலூர்- மேட்டூர் அணைப் பகுதி வரை இரட்டை ரயில் பாதைத் திட்டத்திற்கும், சேலம்- வாணியம்பாடி வரை சுமார் 44 கிலோ மீட்டர் வரையிலான 4 வழிச்சாலைத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
இதனிடையே, பிரதமர் வருகையையொட்டி, திருச்சியில் இன்று (ஜன.01) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.