Homeசெய்திகள்தமிழ்நாடு"பிரதமரைச் சந்தித்தது ஏன்?"- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

“பிரதமரைச் சந்தித்தது ஏன்?”- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

-

- Advertisement -

 

"பிரதமரைச் சந்தித்தது ஏன்?"- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது குறித்து தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!

கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி அன்று மதுரை வந்த போது பிரதமர் நரேந்திர மோடியை தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசியிருந்தார். பிரதமர்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில் இந்த விவகாரம் பேசுப்பொருளானது.

பிரதமருடனான சந்தித்துக் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “பிரதமரைச் சந்தித்தது தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் இல்லை; பணி நிமித்தமே அவரை சந்தித்தேன். முதலமைச்சர் அலுவலகம் வழங்கிய அரசாங்க பணியைதான் நான் செய்தேன். தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பிரதமரை சந்திக்கவில்லை; போலி செய்தியை வேண்டுமென்றே பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

அண்மையில் அரசு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துறை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ