பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38- ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துகள்; தமிழக மக்கள் சார்பில் உங்களை வரவேற்கிறேன். திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.
பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!
கல்வியில் சிறந்த என்ற எந்த பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரி கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்பதே கொள்கை. இன்னார் தான் படிக்க வேண்டும் என்பதை மாற்றி அனைவரையும் படிக்க வைக்கும் ஆட்சி நடைபெறுகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீதிக்கட்சி ஆட்சியின் திட்டம் தான் தமிழகத்தை உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளது. அனைத்துத் தரப்பைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்விப் படிக்க தேவையான உதவிகளை அரசு செய்கிறது. திறனை மேம்படுத்தி 1.40 லட்சம் பேருக்கு ஓராண்டில் வேலை வாய்ப்புப் பெற்று தரப்பட்டுள்ளது.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.