Homeசெய்திகள்தமிழ்நாடு“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

-

- Advertisement -
kadalkanni

 

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மோடிசென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவாமல் திமுக அரசு அக்கறையின்றி செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜ.க பரப்புரை கூட்டத்துக்கு வந்தடைந்தார். அங்கு பா.ஜ.க கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் புடை சூழ மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம்” என்று கூறி தமிழில் உரையை தொடங்கினார். “தமிழ்நாட்டுக்கும் எனக்குமான உறவு மிகவும் பழமையானது. சென்னை முழுக்க வெளிச்சத்தால் சூழ்ந்துள்ளது. அதனால் நான் இங்கு வரும் எனக்குள் சக்தி உண்டாகுகிறது. மிகவும் திறன் மிகுந்த இளைய தலைமுறையினரால் நிரம்பியுள்ள சென்னை, நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகிக்கிறது. அதில் சென்னை மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்தியா எரிசக்தி துறையில் உச்சத்தை அடையும் நாள் வெகு தொலைவில் கிடையாது. இந்தநாடு எரிசக்தி பயன்பாட்டில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும். அதற்கான திட்டங்களை பா.ஜ.க அரசு துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கல்பாக்கம் ஈணுலையில் விரைந்து மின் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாஜக கூட்டத்துக்கு வந்த மக்கள்

நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் ஒருசிலருக்கு அச்சம் ஏற்படுவதை நான் உணர்கிறேன். அது ஏன் தெரியுமா..? தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கான ஆதரவு பெருகி வருகிறது. அதை பார்க்கும் பலருக்கு பீதி உண்டாகுகிறது. பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் போது நமது நாடு உலகளவில் மூன்றாவது பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். விவசாயிகளும் ஏழைகளும் தான் என்னுடைய சொந்தங்கள். ஆதரவற்றவர்கள் என்னுடைய குடும்பத்தார்கள். எளிய மக்களுக்கு தேவையான அதிகாரம் மற்றும் உரிமைகள் கிடைப்பதற்கு வேண்டி நான் பெரிதும் உழைத்து வருகிறேன்.

எனது தலைமையிலான அரசு சென்னையில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதில் மெட்ரோ விரிவாக்கப் பணிகள், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டை சிறப்பான மாநிலமாக மாற்றுவதற்கு உறுதிகொண்டு எனது அரசு உழைத்து வருகிறது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை சென்னையில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தவுள்ளோம்.

திமுக அரசாங்கம் மத்திய அரசு மக்களுக்காக செய்யும் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது மக்களுக்கு நேரடியாக உதவாமல் ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டிருந்தது. மக்கள் துன்பத்தில் இருந்தபோது திமுக அரசாங்கம் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. உங்களுடைய வேதனையை என் தலைமையிலான பாஜக அரசு நன்கு புரிந்துவைத்துள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைவதால், திமுக அரசால் அதில் எந்த ஊழலும் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறது.

மக்களுக்கு திமுக-வையும் தெரியும் காங்கிரஸையும் தெரியும் . இவ்விரு கட்சிகளும் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன. அவர்களுக்கு குடும்பம் தான் முதலில், எனக்கு இந்த நாடு தான். எனக்கு குடும்பம் கிடையாது என்று கூறி பலரும் விமர்சனம் செய்கின்றனர். எனக்கு இந்த நாடு தான் குடும்பம். மக்கள் தான் என்னுடைய குடும்பத்தார்கள். நான் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறேன். தேசத்தின் நன்மைக்காக வீட்டை விட்டு வந்தேன். அதனால் இந்திய மக்களையே என் குடும்பமாக நினைத்து வாழுகிறேன். இந்த நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்குவதே என்னுடைய நோக்கம் என்று மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

MUST READ