Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் வரும் பிரதமரின் 3 நாள் பயணத் திட்டம்!

தமிழகம் வரும் பிரதமரின் 3 நாள் பயணத் திட்டம்!

-

 

தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!

தமிழகத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) வருகிறார். சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளைத் தொடங்கி வைக்கும் அவர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கும் செல்லவுள்ளார்.

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த சூரி ….ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 06.00 மணிக்கு நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 04.50 மணிக்கு சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு மாலை 05.20 மணிக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!

அப்போது, பா.ஜ.க.வின் மாநில ஆன்மீகப் பிரிவு சார்பாக, சிவானந்தா சாலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேள வாத்தியங்கள் முழங்க பூரணக் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி, இரவு 07.45 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர் ஜனவரி 20- ஆம் தேதி காலை 09.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலை 10.55 மணியளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, கார் மூலம் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர், ஜனவரி 20- ஆம் தேதி மதியம் 02.10 மணியளவில் ராமேஸ்வரம் செல்கிறார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். இரவு 07.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். ஜனவரி 21- ஆம் தேதி காலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடும் பிரதமர், ராமநாதசுவாமி கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த சூரி ….ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

பின்னர், காலை 10.05 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சாலை மார்க்கமாக பிரதமர் செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் காலை 10.25 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கவுள்ளார். காலை 11.05 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

MUST READ