
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன். சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்பு மற்றும் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்
புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக மத்திய அரசு ரூபாய் 450 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை முதற்கட்டமாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது. அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.