திருப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது தொண்டர் ஒருவர் தவறுதலாக செல்போனை வீசினார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர கலந்து கொண்டார். விழாவுக்கு திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சென்றுக் கொண்டிருந்த இருபுறமும் சூழ்ந்திருந்த தொண்டர்கள் மலர்களைத் தூவி வரவேற்றனர்.
அப்போது மலர்களுடன் சேர்ந்து செல்போனும் பிரதமர் சென்ற வாகனத்தின் மீது விழுந்தது. இதனை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சுதாரித்துக் கொண்டனர். அத்துடன், செல்போனை எடுத்து தொண்டரிடம் ஒப்படைக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?
பிரதமர் வாகனத்தில் மலர்களை வீசும் ஆர்வத்தில் தொண்டர் தனது செல்போனையும் சேர்த்து வீசியுள்ளார்.